இந்தியாவில் ஐபிஎல் தொடர் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் கிரிக்கெட் ரசிகர்களை கவர்வதற்காக கிரிக்கெட் வீரர்கள் தொடர்பான ஸ்டிக்கர்கள் வாட்ஸ் ஆப் செயலியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. தற்போது இந்த வசதி ஆன்டிராய்டு மொபைல் போன்களில் மட்டுமே பயன்படுத்தும்படி அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வசதியினை பெறுவதற்கு முதலில் வாட்ஸ் ஆப் செயலில் Chat Barல் உள்ள ஈமோஜி வசதியினை செலக்ட் செய்யவும் பின்னர் ஈமோஜி ஸ்கிரீனிலுள்ள ஸ்டிக்கர் வசதியினை தேர்வு செய்து அதில் புதிய ஸ்டிக்கர்களை சேர்பதற்காக ‘+’ குறியீட்டினை அழுத்தவும். இப்போது கிரிக்கெட் மேச் அப் என்னும் சொல்லை பயன்படுத்தி தேடுவதன் மூலம் குறித்து கிரிக்கெட் ஸ்டிக்கர்களை டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம். உலக கோப்பை நடக்க இருக்கும் இந்நிலையில் இந்த புதிய ஸ்டிக்கர்களுக்கு உலக அளவில் பலத்த வரவேற்பு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.