வாட்ஸ் ஆப்பில் சேட் லாக் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.பயனர்கள் மிகவும் நெருக்கமான உரையாடல்களை பாதுகாக்க சேட் லாக் வசதியை வாட்ஸ் ஆப் அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த வசதியின் மூலம் பயனர்கள் தங்கள் தனிப்பட்ட அல்லது குழுக்களில் முக்கிய உரையாடல்களை லாக் செய்யலாம். லாக் பட்டியலில் தனிப்பட்ட நபர் மற்றும் குழக்களை சேர்க்கலாம். இவ்வாறு சேட் லாக் பட்டியலில் சேர்த்தபின் அதற்கான ஸ்கிரினில் மட்டுமே உரையாட முடியும்.பயனர்கள் தங்கள் செல்போனின் கடவுச்சொல் அல்லது கைரேகை போன்ற பயோமெட்ரிக் மூலம் இந்த உரையாடலை திறக்க முடியும். லாக் சேட்டில் புகைப்படம் மற்றும் விடியோக்கள் சேர்க்கப்பட்டு உள்ளதால், தானாக கேலரியில் சேமிக்கப்படாது.இந்த வசதியை பெற வாட்ஸ் ஆப்பில் தனிப்பட்ட நபரின் ப்ரொஃபைல் பகுதிக்கு சென்று சேட் லாக் என்பதை கிளிக் செய்ய வேண்டும். கைரேகை பதிவு மூலம் சேட் லாக் வசதியை பெற்று கொள்ளலாம்.வாட்ஸ் ஆப் வரும் மாதங்களில் சேட் லாக்குக்கான கூடுதல் விருப்பங்களைச் சேர்க்கப் போவதாக அறிவித்துள்ளது. அதன்படி, தனிப்பட்ட பயனர்களுக்கு தனித்தனியான கடவுச்சொல்லை வைத்துக் கொள்ளலாம்.

ரகசிய ஆவணங்களை திருட்டு: டொனால்டு டிரம்ப் மீது 7 குற்றச்சாட்டுகள் பதிவு.
2020-ஆம் ஆண்டு தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இதன்...
Read More