வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம் அங்கு பணிபுரியும் செவிலியர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆகியோர் நோயாளிகளிடம் சிகிச்சை அளிக்க லஞ்சம் பெறுகின்றனர் என தொடர்ந்து புகார் எழுந்து வந்தது. இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பெண்மணி அசின்தாஜ் என்பவர் நேற்று அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு டிரிப்ஸ் போட மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
ஆனாலும் அங்கு பணிபுரியும் செவிலியர்கள் இதற்காக 200 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளளனர். அந்த லஞ்ச பணத்தை உதவியாளர் ஜெயா என்பவர் பெறும் வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இது குறித்து நோயாளியின் உறவினர் வாணியம்பாடி மருத்துவ அலுவலரிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் அவர்மீது எடுக்கபடவில்லை என புகார் தாரர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.