தனுஷ் செல்வராகவன் கூட்டணியில் அண்மையில் வெளியான நானே வருவேன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று 40 கோடிகளை வசூல் செய்தது. பல தோல்வி படங்களை தொடர்ந்து கொடுத்து வந்த நடிகர் தனுசுக்கு இந்த படம் ஆறுதலாக அமைந்தது.
நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என பல்வேறு துறைகளிலும் தன் தனி முத்திரையை பதித்தவர் தனுஷ். ஒரு பக்கம் இவர் நடித்த படங்களுக்கு பெருவாரியான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால், இவர் எழுதிய, எழுதும் பாடல்களுக்கு தனி ரசிகர் படையே உண்டு.
3 படம் துவங்கி நானே வருவேன் திரைப்படம் வரை பாடலாசிரியர் தனுஷ் பல சிறந்த சம்பவங்களை செய்துள்ளார். தற்பொழுது, இவர் நடித்து முடித்துள்ள “வாத்தி” படத்தில் ஜி வி பிரகாஷ் குமார் இசையில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் “தனுஷ்”வரிகளில் படத்தின் முதல் சிங்கிள் விரைவில் வெளியாகும் என இசை அமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் முகநூலில் அறிவித்து தனுஷ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து உள்ளார். இந்த படம் டிசம்பர் மாதம் தமிழ் தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.