ராமநாதபுரம் நகராட்சி கட்டுப்பாட்டில் நடத்தப்படும் வாரச்சந்தை கட்டிடங்கள் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதையடுத்து ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் வடக்கு பகுதியில் சாலையோரம் வியாபாரிகள் கடை அமைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் போக்குவரத்திற்கு கூட்ட நெறிசலில் பொதுமக்களிடம் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அதனைத்தொடர்ந்து வாரச்சந்தை இடிக்கப்பட்ட இடத்தில் நிரந்தர தீர்வாக புதிய கான்கீரிட் கடைகளை கட்டிதர வாரச்சந்தை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More