வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம் யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய ரோல்களில் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைய உள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்ஸ் ரசிகர்களை சுண்டி இழுத்து வருகிறது.
பொங்கலுக்கு வாரிசு படம் வெளியாவது உறுதி ஆகி உள்ள நிலையில், அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், வாரிசு படத்தின் பாடல்கள், டீஸர், டிரெய்லர் வெளியீடு என அடுத்தடுத்து வெளியீடு குறித்து பிளான் வைத்துள்ளது படக்குழு.
அதன்படி, வரும் 23 அன்று படத்தின் முதல் சிங்கிள் விவேக் வரிகளில், தமன் இசையில் வெளியாக உள்ளது என தகவல் கசிந்துள்ளது. அதே போல டிசம்பரில் அனைத்து பாடல்களும், ஜனவரியில் டீஸர் அல்லது டிரெய்லர் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.