வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ள நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

தமன் இசையில் வெளியான ரஞ்சிதமே பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி உள்ள நிலையில், படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு அடுத்த மாதம் 24 அன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாரிசு படத்தை ஆந்திராவில் உள்ள திரை அரங்குகளில் வெளியிட தெலுங்கு தயாரிப்பாளர்கள் போர்கொடி தூக்கியுள்ள நிலையில், படத்தை வெளியிட பேச்சுவார்த்தைகள் தீவிரம் அடைந்துள்ளன.

இந்த நிலையில், வாரிசு படத்தின் தமிழக உரிமையை தயாரிப்பாளர் லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் நிறுவனம் கைபற்றியுள்ளதை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் தான் விஜய் 67 படத்தின் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
