2014 ஆம் ஆண்டு வெளியான “ஜில்லா” படத்துக்கு பிறகு தற்போது 2022 இல் தான் விஜய் மீண்டும் அதே போன்ற ஒரு குடும்ப டிராமா பின்னணியில் “வாரிசு” படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த படத்தில் திரைத்துறையில் இருக்கும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். தில் ராஜு பிரம்மாண்ட தயாரிப்பில் வம்சி இப்படத்தை இயக்கி உள்ளார். தமன் இசை அமைத்துள்ளார்.
இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் பிரீ பிசினஸ் குறித்த தகவல் கசிந்துள்ளது. அதாவது ₹300 கோடிகளாம். இன்னும் தெலுங்கு ரைட்ஸ் விற்கப்படவில்லை என்பது குறிப்படத்தக்கது.
இதற்கிடையில் தமது 67 வது படதுக்கு விஜய்யின் சம்பளம் ₹130 கோடிகள் என சொல்லப்படுகிறது.