வாரிசு படத்தின் பிரீ ரீலீஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, படத்தின் இரண்டு பாடல்களும் இணையத்தை ஆக்கிரமித்து வரும் நிலையில், இன்னும் 26 நாட்களில் வாரிசு படம் உலகமெங்கும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போதே வெளி நாடுகளில் வாரிசு பட டிக்கெட் விற்பனை துவங்கி முதல் நாள் ஹவுஸ் ஃபுல் ஆகி உள்ளது.

இந்த நிலையில், தல தளபதி இருவரின் படங்களும் ஒரே நாளில் 6 வருடங்களுக்கு பிறகு வருவதால் இருவரின் ரசிகர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

டிசம்பர் 24 அன்று இசை வெளியீடு மற்றும் டிரெய்லர் வெளியீடு என கூறப்படும் நிலையில், அந்த நிகழ்ச்சிக்கு தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு மற்றும் பவன் கல்யாண் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்க பட வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.
