1963 ஆம் ஆண்டு கற்பகம் படம் துவங்கி காவியத் தலைவன் வரை வாலிபக் கவிஞர் வாலி எழுதிய பாடல்கள் 15,000. எம் எஸ் விஸ்வநாதன் முதல் அனிருத் வரை அவர் அனைவருக்கும் தமிழை வாரி வழங்கியுள்ளார்.

எம் எஸ் விஸ்வநாதன், இளையராஜா, தேவா, ஏ ஆர் ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் ஷங்கர் ராஜா, அனிருத், தமன் என அந்த காலம் முதல் இந்த காலம் வரை சுமார் 5 தலைமுறை இசையமைப்பாளர்கள் உடன் இவர் பணியாற்றி பல்வேறு வகையான பாடல்களை தமிழ் சினிமாவிற்கு தன் எழுத்தால் கலை செய்துள்ளார்.

எவரிடமும் ஈகோ இன்றி பழககூடியவர். அதனால் தான் இவரை அனைவரும் வாலிபக் கவிஞர் என செல்லமாய் அழைப்பது உண்டு. அதே போல குறுகிய நேரத்தில் இசைக்கு சொற்களை எதுகை மோனையோடு தொடுத்து கொடுப்பதில் வாலியே இன்று வரும் புதிய பாடல் ஆசிரியர்களுக்கும் முன்னோடி.

அத்தை மடி மெத்தையடி, உன்ன நெனச்சேன், சின்ன ராசாவே, சிக்கு புக்கு ரயிலே, எல்லா புகழும் ஒருவனுக்கே, கலாசலா, எதிர்நீச்சல் அடி, போன்ற சில பிரபலமான பாடல்களை எடுத்துக் காட்டாக சொல்லலாம். தேசிய விருது, ஃபில்ம் ஃபேர் விருது என எத்தனை விருதுகளை அவர் பெற்று இருந்தாலும் தன் மரணம் வரை தலைகணம் இன்றி பயணித்ததில் வாலிக்கு நிகர் அவரே.

வாலிபக் கவிஞர் வாலி அவர்களின் 91 பிறந்த நாளில் வாழ்துவதில் பெருமிதம் கொள்கிறது எம் நாடு செய்தி குழுமம்.
