தூத்துக்குடியில் அண்மை காலமாக திருநங்கைகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர். இந்த நிலையில் இன்று 10 திருநங்கைகள் ஒன்று சேர்ந்து வாலிபர் ஒருவரை வழிமறித்து அவரிடம் இருந்து மொபைல் போனை கைப்பற்றி சரமாரியாக தாக்குகின்ற வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதனைத்தொடர்ந்து தாக்கப்பட்ட வாலிபர் அளித்த புகாரின் பேரில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட திருநங்கைகளை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர். மேலும் பொதுமக்களிடம் வலுக்கட்டாயமாக பணம் பறிப்பதை காவல்துறையினர் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More