Mnadu News

வால்பாறையில் பள்ளி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேரணி

கோவை மாவட்டம் வால்பாறையில் உலக மாற்றுத் திறனாளிகள் குழந்தைகள் தின நாளை முன்னிட்டு வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சிவன் ராஜ் தலைமை தாங்கினார். இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் மாற்று திறனாளி குழந்தைகள் கலந்துகொண்டு கல்வி பற்றியும் விழிப்புணர்வு பற்றியும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு வால்பாறை பிரதான சாலையில் பேரணியாக சென்றனர். மேலும் மாற்றுத்திறனாளிகள் குழந்தைகள் படிப்பு தொடர்பாகவும் அவர்களின் திறமையை வெளிக் கொணரும் வகையில் கோஷங்களை எழுப்பினர். இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், மற்றும் காவல்துறையினர் பங்கேற்றனர்.

Share this post with your friends