Mnadu News

வாழை இலை விருந்தை கண்டு வியந்த அமெரிக்க தூதர்: வைரலாகும் வீடியோ.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் முன்னாள் மேயரான எரிக் கார்செட்டி, கடந்த மார்ச்சில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக பொறுப்பேற்றார்.இந்த சூழலில்,டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் வாழை இலையில் தமிழக உணவுகளை உண்டு மகிழ்ந்தார். ,ஸ்பூன், கத்தி இல்லாமல் கைகளில் எடுத்து உண்பது வித்தியாசமாக இருப்பதாக கூறிய அவர், கார பனியாரம், தேங்காய் சட்னி, வடை, கூட்டு, பொறியல் என 14 வகைகளுடன், பில்டர் காபி, பீடா என அனைத்தையும் ருசித்து மகிழ்ந்தார். இது தொடர்பான வீடியோவை தனது டிவிட்டரில் பகிர்ந்துள்ள அவர், ‘இந்த தென்னிந்திய உணவு வகைகளின் விதவிதமான சுவை என்னை மிகவும் ஈர்த்துள்ளது. சென்னைக்கு என் இதயத்தில் இடம் உள்ளது. விரைவில் உன்னை பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்’ பதிவிட்டிருந்தார்.,எரிக் கார்செட்டியின் வீடியோ 2 லட்சத்து 35 ஆயிரம் பார்வைகளுடன், 4 ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட லைக்குகளுடன் வைரலாகி வருகிறது. குழந்தைகளுடன் கலகலப்பாக பேசி கொண்டு அவர் உண்பதை பலர் பாராட்டினார். சிலர், தங்கள் மாநில உணவுகளை ஒருமுறை உண்டு மகிழ வருமாறு கேட்டுகொண்டனர். நெட்டிசன் ஒருவர், ‘உணவு வகையிலும் சுவையிலும் இந்தியா தான் உலகின் பணக்கார நாடு’ என பதிவிட்டிருந்தார்.

Share this post with your friends