Mnadu News

விசாகப்பட்டினம்-கொல்லம் இடையே சிறப்பு ரயில்: முன்பதிவு தொடங்கியது.

தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி குறிப்பில், விசாகப்பட்டினத்தில் இருந்து ஞாயிற்றுகிழமை காலை 7.20 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண்.08567) டிச.4, 11, 18, 25 மற்றும் 2023 ஜன.1, 8, 15 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது.
மறுமார்க்கமாக செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண்.08568) கொல்லதிலிருந்து டிச.5, 12, 19, 26 மற்றும் 2023 ஜன.2, 9, 16 ஆகிய தேதிகளில் இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு செவ்வாய்க்கிழமை இரவு 11.50 மணிக்கு விசாகப்பட்டினம் சென்றடையும்.
இந்த ரயில் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இதற்கான முன்பதிவு தற்போது தொடங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends