தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் என்றால் அது தளபதி விஜய் தான். ஆம், அந்த அளவுக்கு பக்கா மாஸ் கமர்ஷியல் ஹீரோ மடெரியல் என்றால் அது விஜய் என்ற ஒற்றை நடிகரை சொல்லலாம். நடிப்பு, நடனம், காமெடி, பாடுவது என அனைத்து ஏரியாக்களிலும் கலக்கும் வல்லவர் இவரே. குறிப்பாக, விஜய்யின் நடனம் இளசுகள் முதல் பெருசுகள் வரை பலரையும் மகிழ்விக்கும் ஒன்று.

விஜய்யின் சுமார் 19 படங்களுக்கும் பல மாஸ் பாடல்களில் தேசிய விருதைப் பெற்ற ஒரே டான்ஸ் மாஸ்டர் தான் நடன இயக்குனராக பணி புரிந்திருக்கிறார் என்பது தான் ஹை லைட். குறிப்பாக, விஜய் “லியோ” படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் இடம்பெற்ற ‘நா ரெடி’ என்ற பாடல் விஜய்யின் 49வது பிறந்தநாள் அன்று வெளியாகி தற்போது வரை இணையத்தை கலக்கி வருகிறது.

இந்த பாடலில் விஜய் சுமார் 2000 நடன கலைஞர்கள் உடன் நடனமாடி கலக்கி இருக்கிறார். இந்த பாடலுக்கு நடனம் அமைத்தவர் நமது தினேஷ் மாஸ்டர் தான்.

2001 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ஷாஜகான் படத்தில் இடம்பெற்ற “சரக்கு வச்சிருக்கேன்” என்ற பாடலில் துவங்கிய பயணம், அதன் தொடர்ச்சியாக யூத் படத்தில் இடம்பெற்ற “அட ஆள்தோட்ட பூபதி நானடா”, பகவதி படத்தில் இடம்பெற்ற “போடாங் கோ”, “கை கை வைக்கவா”, சிவகாசி படத்தில் கோடம்பாக்கம் ஏரியா பாடலுக்கும், வேட்டைக்காரன் படத்தில் “நான் அடிச்சா தாங்க மாட்ட” மற்றும் சுறா படத்தில் “தஞ்சாவூர் ஜில்லாகாரி” மற்றும் தலைவா படத்தில் “வாங்கண்ணா வணக்கங்கண்ணா” போன்ற படங்களுக்கும் தினேஷ் மாஸ்டர் தான் நடனம் அமைத்துக் கொடுத்தார்.

அதுமட்டுமல்ல விஜய் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான மாஸ்டர் படத்தில் சூப்பர் ஹிட் அடித்த இரண்டு பாடல்களான குட்டி ஸ்டோரி, வாத்தி கம்மிங் போன்ற போன்ற பாடல்களுக்கும் கடைசியாக இந்த வருடம் ஆயுத பூஜைக்கு ரிலீஸ் ஆக இருக்கும் லியோ படத்தின் ‘நா ரெடி’ பாடலுக்கும் தினேஷ் மாஸ்டர் தான் நடனம் அமைத்துக் கொடுத்தார்.

விஜய்யின் அசாத்திய நடன திறனை வெளிக்கொண்டு வந்த பட்டியலில் தினேஷ் மாஸ்டருக்கு தனி இடம் உண்டு.