வெற்றி மாறன்:
பொல்லாதவன் படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் வெற்றி மாறன். பாலுமகேந்திரா பட்டறையில் இருந்து வந்தவர் என்கிற அடையாளம் கலைந்து இப்போது இந்தியாவின் மோஸ்ட் வான்டட் இயக்குநர் என்கிற அடையாளத்தை பெற்று கலக்கி வருகிறார் தமது கலை படைப்புகள் வாயிலாய்.

தொடர் தரமான படங்கள் :
தமது படங்களில் வரும் கதைகளை மிகை படுத்தாமல் நேர்த்தியாக எடுப்பதில் இவர் வல்லவர் என்றே சொல்ல வேண்டும். ஆம், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன், விடுதலை என மக்களுக்கான மொழியில் படங்களை கொடுத்து வருகிறார்.

தனுஷ் வெற்றி மாறன் காம்போ:
தனுஷ் என்று சொன்ன உடனேயே வெற்றி மாறன் தான் நினைவுக்கு வருவார். அந்த அளவுக்கு இவர் இயக்கத்தில் பல படங்களில் நடித்த ஒரே நடிகர் இவரே. அதுவும் அனைத்தும் கல்ட் படங்கள். இவர்கள் காம்போ வில் வட சென்னை 2, புதிய கதை போன்ற படைப்புகள் வர உள்ளன.

தேடி வந்த விஜய் பட வாய்ப்பு :
ரஜினிக்கு ஒரு கதை செல்லி அது முற்றிலும் அரசியல் வாடை அடிப்பதால் வேண்டாம் என ரஜினி கூறவே. அடுத்ததாக விஜய் இவரை கதை கூற அழைக்க அந்த கதை விஜய்க்கு பிடித்து போக இந்த படம் டேக் ஆஃப் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, விஜய்யின் 70 படம் இதுவாக இருக்கும் என்றும், இது விஜய்யின் திரை வாழ்வில் ஒரு மிக முக்கியமான படமாக அதாவது அரசியலை பேசும் படமாக அமையும் எனவும் சொல்லப்படுகிறது. இதை வெற்றியும் ஒரு நேர்காணலில் உறுதி செய்துள்ளார். இதற்காக வெற்றி மாறனுக்கு ₹40 கோடிகள் வரை சம்பளம் பேசப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
