கடந்த 1971-ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 16 ஆம் தேதி விஜய் திவாஸ் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் இன்று விஜய் திவாஸை முன்னிட்டு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியிலுள்ள போர் நினைவிடத்தில் உயிரிழந்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
முன்னதாக, முப்படைகளின் தலைமைத் தளபதி (சிடிஎஸ்) அனில் சௌகான், ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே, விமானப்படைத் தளபதி விஆர் சௌத்ரி, இந்தியக் கடற்படைத் துணைத் தலைவர் எஸ்என் கோர்மேட் உள்ளிட்டோரும் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘1971 போரில் இந்தியாவின் வெற்றியை உறுதி செய்த துணிச்சலான அனைத்து ஆயுதப் படை வீரர்களுக்கும் விஜய் திவாஸ் அன்று மரியாதை செலுத்துகிறேன். நாட்டைப் பாதுகாப்பாக வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ஆயுதப் படைகளுக்கு நம் நாடு எப்போதும் கடமைப்பட்டிருக்கும்’ என்று பதிவிட்டுள்ளார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More