பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் இரண்டு வாரங்களுக்கு முன் வெளியாகி திரை அரங்குகளில் வசூல் வேட்டை நடத்தி வரும் படம் “லவ் டுடே”. பெரும் இளம் நட்சத்திர பட்டாளம் நடித்துள்ள இப்படம் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளது. இதனால் திரை அரங்குகளில் நாளுக்கு நாள் காட்சிகள் அதிகமாகி கொண்டே செல்கிறது.

இந்த வெற்றியின் மூலம் இப்படத்தை தெலுங்கு மொழியில் டப்பிங் செய்து வெளியிட முன்னணி தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு லவ் டுடே படத்தை பெரும் தொகைக்கு கைபற்றி தெலுங்கு மொழியில் வெளியிட உள்ளார் விரைவில். இந்த நிலையில் இன்று படத்தின் டிரெய்லரை விஜய் தேவரகொண்டா வெளியிட்டு உள்ளார்.

தற்போது லவ் டுடே திரைப்படம் ₹45 கோடிகளை வசூல் செய்துள்ளது, இன்னும் இரண்டு வாரங்கள் ஓடினால் ₹100 கோடி வசூலை இப்படம் அடையும் என திரை அரங்கு உரிமையாளர்கள் கூறுகின்றனர். மொத்தமாக இப்படம் அனைத்து உரிமைகளையும் சேர்த்து தமிழில் மட்டும் ₹200 கோடி வசூலை அள்ளிக் விட முடியும் என கருதப்படுகிறது.

டிரெய்லர் லிங்க் : https://youtu.be/BWkP95PazWo