லியோ :
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், திரிஷா, அர்ஜுன், கெளதம் மேனன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்து வரும் படம் “லியோ”. மிகவும் பிரம்மாண்டமான பொருட்செலவில் இந்த படம் உருவாக்கப்பட்டு வருகிறது. அனிருத் மூன்றாவது முறையாக விஜய் படத்துக்கு இசை அமைகிறார். இதன் இரண்டாம் கட்ட ஷூட்டிங் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், படக்குழு தீவிரமாக பணியாற்றி வருகிறது.
விஜய் பிறந்த நாள் சர்ப்ரைஸ் :
வழக்கமாகவே விஜய்யின் பிறந்த நாள் அன்று அவர் நடிக்கும் படத்தின் படக்குழு ஒரு செம சர்ப்ரைஸ் வைத்து இருக்கும் ரசிகர்களை மகிழ்விக்க. அப்படி, யாரும் எதிர்பாராத நேரத்தில் “லியோ” படத்தின் முதல் சிங்கிள் பாடலான “ஆல்டர் ஈகோ நா ரெடி” என்கிற பாடலை படக்குழு ஜூன் 22, மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளதாக கூறி உள்ளது. பெரும்பாலும் இந்த பாடலை விஜய்யே பாடி இருப்பர் என கணிக்கப்படுகிறது. மேலும், இந்த பாடலை விக்னேஷ் எடவன் எழுதி இருக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவர் ஏற்கனவே மாஸ்டர், விக்ரம் படங்களில் பாடல்கள் எழுதி உள்ளார், அதோடு லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குநர் என்பது குறிப்பிடதக்கது.
ஆடியோ லாஞ்ச் பிளான்:
அக்டோபர் 19 அன்று “லியோ” வெளியாக உள்ளதால், செப்டம்பர் இறுதியில் ஆடியோ லாஞ்ச் பெரும்பாலும் மதுரையில் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் விஜய்யின் உத்தரவு படி இந்த முறை நேரு உள்விளையாட்டு அரங்கத்தை படக்குழு தவிர்த்து உள்ளது.