பொங்கல் பண்டிகையின் போது வெளியாகும் விஜய் படங்கள் பெரும்பாலும் ஹிட் அல்லது பிளாக் பஸ்டர் ஹிட் என்பதே எழுதப்படாத விதி. அப்படி பொங்கலுக்கு வெளியான அவரின் பல படங்கள் வெற்றியை மட்டுமே பதிவு செய்துள்ளன.
உதாரணமாக ப்ரெண்ட்ஸ், காவலன், போக்கிரி, கத்தி, மாஸ்டர் ஆகிய படங்களை சொல்லலாம் அந்த வரிசையில் இணைந்துள்ளது “வாரிசு”. இந்த படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு எழுந்துள்ள நிலையில், படம் வெளியாகும் முன்பே பல கோடிகளை இப்படம் ஈட்டி உள்ளது.
இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு வெளியான மாஸ்டர் திரைப்படம் 300 கோடிகள் வரை வசூல் செய்தது. தற்பொழுது ரத்தம் ரணம் ரௌத்திரம் படத்தை தொடர்ந்து, ஜப்பான் மொழியில் மாஸ்டர் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.