விஜய்யின் 67 வது லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள நிலையில், படத்தின் அப்டேட்ஸ் கேட்டு வந்த பலருக்கும் இந்த படத்தின் இசை உரிமையை கைபற்றி உள்ள சோனி முசிக் சவுத் நிறுவனம் படத்தின் பூஜையை ஒரு வீடியோவாக வெளியிட்டு உள்ளது.
இதனால் இந்த படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது தற்போது தெளிவாகி உள்ளது. அதன்படி, மன்சூர் அலிகான், திரிஷா, அர்ஜுன் மற்றும் பலர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

மேலும், மிஷ்கின், சஞ்ஜய் தத், கெளதம் மேனன் ஆகியோர் பூஜையில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் படத்தில் உள்ளனர் என்பதும் அனைவரும் அறிந்ததே.

ஆனாலும் கூட லோகேஷ் படம் என்றாலே பல சர்ப்ரைஸ் விஷயங்கள் திரை அரங்குகளில் வரும் போதே தெரிய வரும். விக்ரம் படத்தில் நடந்தது போல சூரியா வந்த காட்சியில் திரை அரங்கமே அதிர்ந்து போனது.

இதே போல இந்த படத்திலும் கைதியில் நடித்த அர்ஜுன் தாஸ், ஜார்ஜ் மரியான் மற்றும் இன்னும் சில முக்கிய நடிகர்கள் கூட நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

லிங்க் : https://youtu.be/TIHFcqKhrrY