விண்வெளியில் தண்ணீருக்கான தீர்வுக்காண பல்வேறு முயற்சிகள் நாசாவால் மேற்கொள்ளப்பட்டது.அதன் ஒரு பகுதியாக, விண்வெளி வீரர்களின் தண்ணீர் தேவை சுற்றுச் சூழல் கட்டுப்பாடு மற்றும் லைஃப் சப்போர்ட் சிஸ்டம் முறைப்படி பெறப்பட்டு வருகிறது. இதில், உணவுப் பொருள் காற்று மற்றும் கழிவுகளை மறுசுழற்சி செய்வதன் மூலம் பெறப்படுகிறது.அதனைத் தொடர்ந்து, விண்வெளி வீரர்களின் சிறுநீர் மற்றும் வியர்வை ஆகியவற்றை மறுசுழற்சி மற்றும் சுத்திகரிப்பு செய்து அதில் இருந்து தண்ணீரை பெறும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, 94 விழுக்காடு சுத்தமான தண்ணீரை பெற்று வந்த நிலையில் தற்போது 98 விழுக்காடாக அதிகரித்துள்ளது. இந்த முயற்சி முழுமையாக வெற்றி அடைந்தால் வரும் காலங்களில் விண்வெளி வீரர்களின் தண்ணீர் தேவையைப் பெறுவதில் பெரிய அளவிலான வெற்றியை பெறலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More