கிருஷ்ணகிரி மாவட்டம் பண்ணந்தூர் அப்பு கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரது 16 வயது மகன் தனுஷ். இவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது இந்திரா நகர் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் மகன் சிவபாரத் தனது இருசக்கர வாகனத்தால் மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளார். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். அதனைத்தொடர்ந்து விபத்து ஏற்படுத்திய நபரை கைது செய்ய வேண்டும் என்றுக்கூறி சிறுவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அதன்பிறகு சிவபாரத் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முந்நூறுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.