Mnadu News

விமர்சையாக முடிந்த திருச்செந்தூர் தை உத்திர வருஷாபிஷேகம்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை உத்திர வருஷாபிஷேகம் நடைபெற்றது. திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மூலவரான சுப்பிரமணியர் பிரதிஷ்டை செய்தது தை உத்திர நட்சத்திரத்தில் ஆகும். எனவே ஆண்டுதோறும் தை மாதம் உத்திர நட்சத்திரத்தன்று இத்திருக்கோயிலில் வருஷாபிஷேகம் நடைபெறுகிறது. நிகழாண்டு தை உத்திர வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, திருக்கோயில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து கும்பங்கள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. அதன்பின்னர் பூஜை செய்யப்பட்ட கும்பங்கள் விமான தளத்திற்குக் கொண்டு வரப்பட்டு, காலை 9.20 மணிக்கு மூலவருக்கும் தொடர்ந்து சண்முகர், வெங்கடாசலபதி, வள்ளி, தெய்வானை விமான கலசங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளைத் திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் இரா.அருள்முருகன், இணை ஆணையர் மு.கார்த்திக் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Share this post with your friends

இந்தியாவுக்கேவழிகாட்டியாகஅமைந்ததுவைக்கம் போராட்டம்:முதல்அமைச்சர் எழுச்சி உரை.

இந்தியாவுக்கே வழிகாட்டியாக அமைந்தது வைக்கம் போராட்டம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி உள்ளார்....

Read More

கர்ப்பிணிகள்வடகொரியாவில்தூக்கிலிடப்படுகிறார் கள்:தென்கொரியா குற்றச்சாட்டு.

தென்கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,ஆறு மாத கர்ப்பிணி பெண்ணை வட...

Read More