வியாட்நாமின் பாதுகாப்பு அமைச்சர் பன் வான் ஜியாங், இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.அவர்,டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.அதையடுத்து, அவர் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து இரு தரப்பு உறவுகள், பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பு, சர்வதேச பிரச்னைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினார்.இது குறித்து பேசியுள்ள பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், கடந்த ஜூன் 2022ஆம் ஆண்டு; வியட்நாமுக்கு எனது பயணத்தின் போது, 2030 ஆம் ஆண்டிற்கான இந்தியா மற்றும் வியட்நாம் பாதுகாப்பு கூட்டாண்மை குறித்த பரஸ்பர தளவாட ஆதரவு ஒப்பந்தம் உள்ளிட்டவை கையெழுத்திடப்பட்டது. இது இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்தும். இது எதிர்காலத்திற்கு பெரிதும் உதவும் என்று நான் நம்புகிறேன். என்று கூறி உள்ளார்.

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் சில இடங்களில் இன்று...
Read More