விருதுநகர் அருகேயுள்ள கோட்டநத்தம் கிராமத்தில் ரமேஷ் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. நாகபுரி தரச் சான்றிதழ் பெற்ற இந்த ஆலையில் சுமார் 40-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. இங்கு பேன்சி ரக பட்டாசுகள் அதிகளவில் தயாரிக்கப்பட்டு வந்தன.இந்த நிலையில், திங்கள்கிழமை இந்த ஆலையில் உள்ள ஓர் அறையில் பேன்சி ரக பட்டாசுகளுக்கான கருந்திரி தயாரிக்கும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கருந்திரியில் ஏற்பட்ட உராய்வு காரணமாக தீ பரவி வெடி விபத்து ஏற்பட்டது.இதில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் சேடப்பட்டி பாண்டுரங்கன் மகன் முத்துப்பாண்டி (42), கட்டனாh்பட்டி பொன்னுசாமி மகன் கருப்பசாமி (60) ஆகியோர் பலத்த காயமைடந்தனர். இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பலியாகினர்.இந்த விபத்தில் பட்டாசு ஆலையின் மூன்று அறைகள் எரிந்து சேதமடைந்தன. விருதுநகர் தீயணைப்புப் படை வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினர்.இதுகுறித்து வச்சகாரபட்டி போலீஸார் வழக்குப் பதிந்து, பட்டாசு ஆலையின் உரிமையாளர் ரமேஷ் (36), ஊழியர் சுப்புராஜ் (35) ஆகியோரைக் கைது செய்தனர்.

அம்ரித்பால் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது: தேடுதல் பணி தீவிரம்.
அமிர்தசரசில் செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் காவல் துறை ஐ.ஜி. சுக்செயின் சிங் கில்,அம்ரித்பாலுக்கு...
Read More