₹10 கோடி பட்ஜெட்டில் உருவாகி 25 நாட்களில் ₹80 கோடிகளை வாரிக் குவித்துள்ளது “லவ் டுடே” திரைப்படம்.
பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் மாபெரும் வசூல் சாதனை புரிந்து வருகிறது இப்படம்.
சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, இவானா, ரவீனா என அனைவரின் நடிப்பும் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி தோல்வி அடைந்த படங்களுக்கு மத்தியில் குறைந்த அளவு எதிர்பார்ப்பில் உருவாகி சாதனை படைத்துள்ளது இப்படம்.
இப்படத்தின் ஒடிடி வெளியீடு உரிமையை நெட்ஃபிளிக்ஸ் பெரும் தொகைக்கு கைபற்றி உள்ள நிலையில் அதில் வரும் 2 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.