இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், வசனகர்த்தாவான ராதாகிருஷ்ணன்
பார்த்திபன் எடுக்கும் படங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு வழக்கமான பாணி முறியடிக்கப் பட்டு ஒரு புதுமை உருவாகும்.
அப்படி அமைந்தது தான் பார்த்திபன் மட்டுமே நடித்து இயக்கி தயாரித்து வெளியான “ஓத்த செருப்பு” திரைப்படம் தேசிய விருது, ஆஸ்கர் நாமினேஷன் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றது.
அதே போல மீண்டும் வேறு ஒரு புதிய முயற்சியாக ஒரே ஷாட்டில் “இரவின் நிழல்” என்ற படத்தை இயக்கி இருந்தார். ரஹ்மான் இசையில் பாடல்கள் பெரும் கவனத்தை பெற்றன. ஆனால், சிங்கிள் ஷாட் மூவி என்பதில் பெரும் சர்ச்சை சமூக வலைதளங்களில் தீயாய் வெடித்தன. ஆனால் படம் வெளியான பிறகு இரவின் நிழல் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் மட்டுமே கிடைத்தன. பாக்ஸ் ஆபிஸில் இப்படம் 10 கோடிகளை மட்டுமே வசூல் செய்தது.
இந்த நிலையில், இப்படம் இன்று அல்லது நாளை அமேசான் பிரைம் ஓ டிடி வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.