தென்னக ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- ரயில்பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 7 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை மதுரை – செங்கோட்டை இடையிலான ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. மதுரை – விழுப்புரம் விரைவு ரயில், வரும் 8 ஆம் தேதி, 10 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரையிலும் பிறகு 28 ஆம் தேதி முதல் 30 தேதி வரை மதுரை – திண்டுக்கல் இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது. பாலக்காடு – திருச்செந்தூர் விரைவு ரயில், வரும் 18, 19, 21, 22 ஆகிய நாட்களில் கோவில்பட்டி – திருச்செந்தூர் இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது. கோவை – நாகர்கோவில் விரைவு ரயில், சென்னை – குருவாயூர் விரைவு ரயில் வரும் 22, 25, 26 ஆகிய தேதிகளில்; தாமதமாக நெல்லை செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 30 ஆம் தேதி மதுரை – செகந்திராபாத் சிறப்பு ரயில் 45 நிமிடங்கள் தாமதமாக காலை 6.15 மணிக்கு புறப்படும். வரும் .22, 25, 26 ஆகிய தேதிகளில்; வாஞ்சி மணியாச்சியில் தூத்துக்குடிக்கு இணைப்பு ரயில் சேவை கிடையாது என்று தென்னக ரெயில்வே தெரிவித்துள்ளது.
விரைவில் தமிழக அமைச்சரவை மாற்றம் என தகவல்
தமிழக அமைச்சரவையில் இன்னும் சில தினங்களில் மாற்றங்கள் இருக்கலாம் என தகவல் வெளியாகி...
Read More