Mnadu News

வில்லனாக நடிக்க குவியும் பட வாய்ப்புகள்! அர்ஜுன் தாஸ் காட்டில் பட மழை தான்!

அர்ஜுன் தாஸ்:

“கைதி” படத்தின் மூலமாக அறிமுகம் ஆனவர் அர்ஜுன் தாஸ். இந்த படம் தந்த அமோக வரவேற்பு இவருக்கு அடுத்தடுத்த பெரிய வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்தது எனலாம். ஆம், தளபதி விஜய் நடித்த “மாஸ்டர்” படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்து அசர வைத்தார்.

ஹீரோ & வில்லன் :

அதன்பிறகு, அர்ஜூன் தாஸ் லீட் ரோலில் நடித்த “அந்தகாரம்” படம் அவருக்கு நல்ல நடிகர் என்கிற பெயரையும், புகழையும் பெற்று தந்தது. வெறும் லீட் ரோல்களில் மட்டும் நடித்து விட்டு போகாமல் வில்லனாகவும் மிரட்டி வருகிறார். ஆம், விக்ரம் படத்திலும் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்து அதிர வைத்தார்.

தொடர் வாய்ப்புகள் :

இவரின் நடிப்பு திறனை பார்த்த வசந்த பாலன் “அநீதி” படத்தில் இவரை ஹீரோவாக்கி அழகு பார்த்தார். தற்போது, இவரின் திசையில் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. ஆம், விடாமுயற்சி படத்தில் இவர் தான் அஜித்துக்கு வில்லன், அதே போல பவன் கல்யாண் படத்தின் வில்லனும் இவரே, இதோடு நில்லாமல் சாஹோ இயக்குனரின் அடுத்த படைப்பிலும் இவரே வில்லன். இதற்காக இவருக்கு பல கோடிகளை அள்ளித் தர தயாரிப்பு தரப்பு முடிவு செய்துள்ளது. எனவே, இனி அர்ஜுன் தாஸ் காட்டில் பண மற்றும் பட மழை தான் என்பதில் சந்தேகமில்லை.

Share this post with your friends

“10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்கிறார்”

திமுகவில் தற்போது இளைஞரணிச் செயலாளராகவும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின்,துணை...

Read More