கடந்த 1966 ஆம் ஆண்டு பால் தாக்கரேவால் மண்ணின் மைந்தர்களுக்கு நீதி என்ற தத்துவத்தில் சிவசேனை கட்சி தொடங்கப்பட்டது. பால் தாக்கரே மறைவிற்கு பின் பாஜகவுடனான உறவை துண்டித்து கொண்டு காங்கிரஸ் உடன கைகோர்த்து கொண்டு ஆட்சியை பிடித்தார் சிவசேனைத் தலைவர் உத்தவ் தாக்கரே. ஆனால், கட்சியை உடைத்து பெருபான்மை சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் ஏக்நாத் ஷிண்டே பாஜக உதவியுடன் முதலமைச்சராக ஆகினார். அதையடுத்து கட்சி சின்னம் முடக்கப்பட்டது. இந்நிலையில், சிவசேனைத் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு பேரதிர்ச்சி ஏற்படுத்தும் விதமாக ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனையை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. கட்சியின் பெயரினையும், அதன் சின்னமான வில் அம்பினையும் ஷிண்டே தலைமையிலான சிவசேனை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.இதனால், சிவசேனை தொடங்கிய காலத்திலிருந்து முதல் முறையாக தாக்கரே குடும்பத்துக்கு கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது.இந்த சூழலில், தனது இல்லத்தின் முன்பு ஆதரவாளர்களை சந்தித்த உத்தவ் தாக்கரே பேசியதாவது: வில் அம்பு சின்னம் திருடப்பட்டிருக்கிறது. சின்னத்தை திருடியவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுக்க வேண்டியுள்ளது. திருடன் பிடிபட்டுவிட்டான். நான் அந்தத் திருடனுக்கு சவால் விடுகிறேன். அந்தத் திருடன் வில் அம்புடன் களத்துக்கு வரும் போது தீப்பந்தத்தினால் பதிலடி கொடுப்போம். சிவசேனை ஆதரவாளர்கள் மாநிலம் முழுவதும் பயணம் மேற்கொண்டு கட்சியின் ஆதரவாளர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்றார்.உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனைக்கு தீப்பந்தம் சின்னத்தை கடந்த ஆண்டு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இந்த சின்னமே புனேவின் கஸ்பா பெத் மற்றும் சின்ச்வாத் தொகுதிகளின் இடைத்தேர்தல் வரை நீடிக்கும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த இரு தொகுதிகளுக்குமான இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 26 ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

அம்ரித்பால் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது: தேடுதல் பணி தீவிரம்.
அமிர்தசரசில் செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் காவல் துறை ஐ.ஜி. சுக்செயின் சிங் கில்,அம்ரித்பாலுக்கு...
Read More