கலைஞர் கருணாநிதியின் பேரன், மு க ஸ்டாலினின் மகன் என்கிற அடையாளத்தோடு மக்களுக்கு அறிமுகம் ஆனவர், சாமானிய மக்களால் சின்னவர் என செல்லமாக அழைக்கப்படுபவர் உதயநிதி ஸ்டாலின்.

ரெட் ஜெயன்ட் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி கடந்த 15 வருடங்களாக தரமான திரைப்படங்களை வெளியிட்டு உள்ளார் உதயநிதி ஸ்டாலின். அதுவும் இந்த வருடம் அவர்களின் தயாரிப்பில் வெளியான அனைத்து படங்களுமே பிளாக் பஸ்டர் ஹிட்.

வெறும் தயாரிப்பு என்பதோடு மட்டும் நில்லாமல் பல நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் இவர். திமுக வென்று ஸ்டாலின் முதல்வர் ஆனதும், சேப்பாக்கம் தொகுதி எம் எல் ஏ வாக இருந்து சிறப்பான பணி செய்து வந்தார்.

தற்போது விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதால் இனி சினிமா வேண்டாம் என முடிவு எடுத்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். சோ, மாமன்னன் தான் கடைசி படம் என பத்திரிக்கையாளர் சந்திப்பில் திட்டவட்டமாக கூறி உள்ளார்.

புதிய விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பு ஏற்றுள்ள உதயநிதிக்கு வாழ்துக்கள் குவிந்து வருகின்றன.
