விழுப்புரம் அருகே உள்ள குண்டலபுலியூர் கிராமத்தில் இயங்கி வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டனர். இங்கு பாலியல் அத்துமீறல், துன்புறுத்துதல், முறைகேடுகள் நடைபெற்று வருவதாக புகார் வந்தது. சமீபத்தில் அன்புஜோதி ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டிருந்த திருப்பூரைச் சேர்ந்த முதியவர் ஜபருல்லாவை காணவில்லை என அவரது மகன் புகார் கொடுக்க, காப்பகத்தினர் மழுப்பான பதிலைத் தெரிவித்துள்ளனர். ஜபருல்லாவை மீட்டுத் தரக்கோரி நீதிமன்றத்தில் மகன் ஆட்கொணர்வு மனு அளித்துள்ளார். அதன்படி அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து ஆசிரமத்திற்கு சீல் வைக்கப்பட்டு, இது தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆசிரமத்தில் இருந்த 33 பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.இந்த சூழ்நிலையில், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வலுத்து வந்த நிலையில், அன்பு ஜோதி ஆசிரமம் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

“எனது இமேஜை கெடுக்க சிலர் தொடர்ந்து முயல்கின்றனர்”: பிரதமர் மோடி குற்றச்சாட்டு.
புதுடெல்லி – போபால் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர...
Read More