விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே விழுப்புரம் – திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஜானகிபுரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான லாரியில் தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது கேரளாவில் இருந்து விழுப்புரம் வழியாக சென்னைக்கு சென்று கொண்டிருந்த verna கார் நின்று கொண்டிருந்த லாரி மீது பின்பக்கத்தில் பலமாக மோதியது. இதில் காரில் பயணம் செய்த ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே முகம் சிதைந்த நிலையில் உயிரிழந்தார் மீதம் உள்ள ஒரு பெண் உட்பட மூன்று நபர்கள் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விழுப்புரம் தாலுகா காவல் துறையினர் விபத்தில் காயமுற்ற நபர்களை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விழுப்புரம் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.