Mnadu News

விஸ்கோஸ் இழைகளுக்கு தரக் கட்டுப்பாடு:மத்தியஅமைச்சருக்கு முதல் அமைச்சர் கடிதம்.

மத்திய ஜவுளித் துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு, முதல்அமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “விஸ்கோஸ் இழைகள் தொடர்பாக, ஜவுளி அமைச்சகம் வெளியிட்டுள்ள தரக்கட்டுப்பாட்டு ஆணைகளை நடைமுறைப்படுத்திட, ஒரு மாதம் மட்டுமே கால அவகாசம் அளிக்கப்பட்டு, பின்னர் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், இந்தியாவில் தயாரிக்கப்படாத – மூங்கில் மரத்தில் தயாரிக்கப்படும் விஸ்கோஸ் பஞ்சு, செயற்கை இழை பஞ்சு மற்றும் நூல்களுக்கு அரசின் தரக் கட்டுப்பாடு ஆணைகளிலிருந்து விலக்கு அளித்திட ஏதுவாக, உரிய உத்தரவுகளை மத்திய ஜவுளித்துறை, ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகங்களுக்கு வழங்கிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Share this post with your friends