விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆட்சி அதிகாரம் பற்றிப் பேசிய பழைய வீடியோவை தனது X தளத்தில் பதிவிட்டு சில மணி நேரங்களிலேயே அந்த வீடியோ X தளத்தில் இருந்து நீக்கப்பட்ட விவாகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் “வீடியோ பதிவை அட்மின் வெளியிட்டு இருக்கலாம் என்றும் அதுபற்றி எனக்கு தெரியாது என்றும் தெரிவித்தார். மேலும் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்பது நீண்டகாலமாக நாங்கள் வைக்கும் கோரிக்கைதான் என்றும் கூறினார்.