வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை பூஜ்ஜியம் புள்ளி இரண்டு ஐந்து சதவீதம் உயர்த்தி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். ,இதன் மூலமாக வங்கிகளின் குறுகிய கால கடன் வட்டி விகிதம் அதாவது ரெப்போ வட்டி விகிதம் 6 புள்ளி இரண்டு ஐந்து சதவீதத்திலிருந்து 6 புள்ளி ஐந்து சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதோடு, இது உடனடியாக அமலுக்கு வருகிறது. நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருவதையடுத்து அதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ரிசர்வ் வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7சதவிதம் ஆக இருக்கும், பணவீக்கம் சராசரியாக 5புள்ளி ஆறு சதவிதம் ஆக இருக்கும் என்றும் உலக பொருளாதாரம் மந்தமாக இருப்பதால் இந்திய பொருளாதாரமும் பாதிக்க வாய்ப்புள்ளதாகவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறியுள்ளார். ரெப்போ வட்டி விகிதம் உயர்வையடுத்து வீடு, வாகனம், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ரெப்போ வட்டி விகிதம் என்பது ரிசர்வ் வங்கி, நாட்டின் பிற வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் ஆகும். ,கடந்த 2022 மே முதல் 6 முறை ரெப்போ வட்டி விகிதம் மொத்தமாக 2புள்ளி ஐந்து சதவிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் போலீசார் இணைந்து நடவடிக்கை.
ஜம்மு காஷ்மீரில் செக்டார் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பயங்கரவாதியை பாதுகாப்பு...
Read More