சிங்கர் டூ இசை அமைப்பாளர் :
ஒரு சுயாதீன இசை கலைஞராக தனது இசை வாழ்வை துவாக்கியவர் ஹிப் ஹாப் ஆதி. ஆம்பள படத்தின் மூலமாக இசை அமைப்பாளர் ஆகவும் அறிமுகம் ஆனார். அதற்கு முன்பாகவே அனிருத் இசையில்”எதிர்நீச்சல்” படத்தில் பாடலை பாடி உள்ளார். ஆம்பள பட பாடல்கள் ஹிட் அடிக்கவே, இவர் தொடர்ச்சியாக பல முன்னணி இயகுனர்களோடு பணியாற்றும் வாய்ப்பை பெற்றார்.
ஆம், இன்று நேற்று நாளை, தனி ஒருவன், கவண், இமைக்கா நொடிகள், கோமாளி, மீசைய முறுக்கு போன்ற பல படங்கள் இவரோட இசை பாதையில் முக்கியமான மற்றும் அவருக்கு ஒரு டர்நிங் பாய்ண்ட் தந்த படங்கள் எனலாம்.
ஹீரோவாக வெற்றிப் பயணம் :
கேமியோ ரோல்களில் அவ்வப்போது தலை காட்டி வந்த ஹிப் ஹாப் ஆதி, “மீசைய முறுக்கு” படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகம் ஆனார். முதல் படமே அவருக்கு நல்ல அங்கீகாரத்தை பெற்று தந்தது. விமர்சனம் மற்றும் வசூல் என இரண்டு அடிப்படையிலும் ஒரு தரமான துவக்கத்தை கொடுத்தது. தொடர்ச்சியாக ஹீரோவாக சக்சஸ் ஃபுல்லாக இவர் தொடர்ந்து நடித்து வருகிறார். ஆம், நட்பே துணை, நான் சிரித்தால், அன்பரிவு போன்ற படங்கள் தயாரிப்பாளர்களுக்கு ஓரளவுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது.
சூப்பர் ஹீரோ படமான வீரன் :
மரகத நாணயம் படத்தின் மூலமாக அழுத்தமான கதைகளை கொடுக்கும் இயக்குநர் என பெயரை பெற்றவர் சரவணன். தற்போது இவர் ஹிப் ஹாப் ஆதியை லீட் ரோலில் வைத்து எடுத்துள்ள படம் “வீரன்”.
கதையின்படி, பள்ளிப்பருவத்தில் இடி தாக்கி பாதிப்புக்கு உள்ளாகிறார் ஹிப் ஹாப் தமிழா ஆதி. உயர் சிகிச்சைக்காக சிங்கப்பூரில் உள்ள அக்கா வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார். சிகிச்சைக்கு பிறகு தனக்குள் சூப்பர் ஹீரோ சக்தி உருவாகி இருப்பதை உணர்கிறார்.
சில வருடங்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு திரும்புகிறார். அவருடைய ஊர் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஆபத்தான ஒரு திட்டத்தை அங்கு தொடங்க தனியார் நிறுவன உரிமையாளரான வினய் முயற்சி செய்கிறார். தனியார் நிறுவனத்தின் திட்டம் மூலம் கிராமத்துக்கு நேரிடப்போகும் பேராபத்தை அறியும் ஹிப் ஹாப் ஆதி தனது சூப்பர் பவர் மூலம் தடுத்து மக்களை காப்பாற்ற போராடுகிறார். அதில் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதே படத்தின் செகண்ட் ஹாஃப்.
வசூல் நிலவரம் :
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான “வீரன்” படம் திரை பார்வையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. ₹8 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு உள்ள இப்படம், தற்போது வரை “வீரன்” திரைப்படம் ₹9 கோடிகளை வசூல் செய்துள்ளது. இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வீரன் வசூல் குறைய துவங்கி உள்ளது. மேலும், ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் பி டி சார் வர உள்ள நிலையில், பல படங்களுக்கு அவர் இசை அமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.