லியோ:
தளபதி விஜய் அவர்கள் ஒரு இயக்குனரை முடிவு செய்து விட்டார் என்றால் அந்த படம் எந்த மாதிரி ரிசல்ட் தரும் என்றெல்லாம் எண்ணாமல் தமது முழு உழைப்பையும் கொட்டி அந்த படத்தை இன்னும் செதுக்குவார். அப்படி, லோகேஷ் கனகராஜ் இன் மாஸ்டர் படத்தின் மேகிங் மற்றும் திறமையில் வியந்த விஜய் அவருக்கு இன்னொரு வாய்ப்பை வழங்கி அது தான் தற்போது நிகழ்ந்து வரும் “லியோ”.
பிரம்மாண்டமான பொருட்செலவில் பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் இப்படம் அக்டோபர் 19 உலகமெங்கும் வெளியாக உள்ளது. இந்த படத்தின் ஒவ்வொரு அப்டேட்ஸ்சும் ரசிகர்களை இன்னும் உற்சாகம் அடைய வைத்து வருகிறது.
தளபதி 68 :
லியோ படம் ஓகே செய்து அது நடந்து வரும் நேரத்திலேயே “விஜய் 68”, அதாவது தமது அடுத்த பட இயக்குனரை தேர்வு செய்து விட்டார் விஜய். யாரும் எதிர்பாராத நேரத்தில் வெளியான இந்த எக்ஸ்க்ளூசிவ் அப்டேட் ரசிகர்களை வியப்பு அடைய வைத்துள்ளது. ஆனால், தற்போது ரசிகர்கள் கொஞ்சம் கொஞ்சமாக லியோ படத்தை பற்றி கேட்பதை விட, விஜய் 68 பற்றி கேட்டு வருவதால், விஜய் மிகுந்த கோபத்தில் உள்ளார் என சொல்லப்படுகிறது. எனவே, லியோ முடியும் வரை விஜய் 68 குறித்து எந்த தகவலையும் வெளியிட கூடாது என ஆர்டர் போட்டு விட்டாராம் வெங்கட் பிரபுவுக்கு. எனவே, லியோ படத்தின் அடுத்தடுத்த அப்டேட்ஸ் வெளியாகி செப்டம்பர் அல்லது அக்டோபர் நெருக்கத்தில் விஜய் 68 அப்டேட் ஒவ்வொன்றாக வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.