Mnadu News

வெங்கட் பிரபு – சிம்பு தேவன் கூட்டணியில் உருவாகும் படம் குறித்த தகவல்

‘இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி’, ‘அறை எண் 305ல் கடவுள்’ மற்றும் ‘புலி’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சிம்பு தேவன். இவர் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபுவின் பிளாக் டிக்கெட் கம்பெனி நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

இந்த படத்தில் 6 நாயகன், 6 நாயகி, 6 இசையமைப்பாளர்கள் மற்றும் 6 படத்தொகுப்பாளர் பணிபுரியவுள்ளனர். இந்நிலையில் இந்த படத்திற்கு ‘கசட தபற’ என தலைப்பு வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படம் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this post with your friends