Mnadu News

வெப்ப அலை: உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை.

நாட்டில் நிலவும் வெப்ப அலை குறித்து மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நாட்டின் சில பகுதிகளில் நிலவும் வெப்ப அலைச் சூழலைச் சமாளிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.நீதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால், ஐசிஎம்ஆர் இயக்குநர் ஜெனரல் டாக்டர் ராஜிவ் பால், வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா,அதிக வெப்பம் நிலவும், வெப்ப அலை சம்பவங்கள் ஏற்படும் மாநிலங்களில், பேரிடர் மேலாண்மை, வானிலை மையம் மற்றும் மத்திய சுகாதார அமைச்சகம் ஆகியவற்றின் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று மாநில அரசுக்கு உதவ அனுப்பப்படும்.ஒடிசா, சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், தெலங்கானா, ஜார்க்கண்ட், பிகார் போன்ற கிழக்கு மாநிலங்களில் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை செய்யவிருக்கிறேன். மேலும் வெப்ப அலை காரணமாக ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்க ஐசிஎம்ஆருக்கு முன்கூட்டியே தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளேன் என்று கூறியுள்ளார்.

Share this post with your friends