எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் பாட்னா வந்தடைந்தனர்.பின்னர் பாட்னாவில் நடைபெறும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் இருவரும் கலந்துகொண்டனர்.கூட்டத்தில் பேசி உள்ள ராகுல் காந்தி, ‘வெறுப்பு, வன்முறையை பரப்பி நாட்டை உடைக்க பாஜக செயல்பட்டு வருகிறது. ஆனால், அன்பைப் பரப்பவும் ஒற்றுமைக்காகவும் நாங்கள் உழைக்கிறோம். எதிர்க்கட்சிகள் அனைத்தும்இங்கு வந்துள்ளன. நாங்கள் ஒன்றாக இணைந்து பாஜகவைத் தோற்கடிப்போம்.இந்தியாவில் கருத்தியல் போர் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் காங்கிரஸ் கட்சியின் ‘பாரத் ஜோடோ’ எனும் ஒற்றுமை நடைப்பயணம் சித்தாந்தம், மறுபுறம் ஆர்எஸ்எஸ், பாஜகவினரின் ‘பாரத் டோடோ’ சித்தாந்தம். காங்கிரஸ் கட்சியின் டிஎன்ஏ பீகாரில் உள்ளது’ என்று பேசினார்.
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More