கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டினருக்கான விசா விநியோகத்தை மீண்டும் வழங்க சீனா முடிவெடுத்துள்ளது.புதிய பயண ஆவணங்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படுவதோடு, மார்ச் 28, 2020 க்கு முன் வழங்கப்பட்ட விசாக்கள், இன்னும் செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுளளது.அந்த விசாக்கள் மீண்டும் சீனாவுக்குள் நுழைய அனுமதிக்கும் என்று தூதரக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதோடு,;, ஷாங்காய்க்கு கப்பல்களில் வருபவர்களுக்கும், ஹாங்காங், மக்காவ் மற்றும் ஆசிய பிராந்தியக் குழுவில் உள்ள நாடுகளிலிருந்து வருவோர்; விசா இல்லாத பயணத்தை மீண்டும் தொடங்க அனுமதிக்கும் என்று இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

செங்கல் சூளைக்கு தடை கோரிய வழக்கில் ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
மதுரை மேலூர் அருகே இயங்கும் செங்கல் சூளையில் இருந்து வெளியேறும் புகையால் சுற்றுசூழல்...
Read More