கோவையில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலை ஒட்டியுள்ள மலைத்தொடரில் ஏழாவது மலையில், சுயம்பு லிங்கத்தை தரிசிக்க மார்ச் முதல் மே மாதம் வரையிலான மூன்று மாதங்கள் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதிக்கப்படுகிறது. இந்நிலையில் நாளை முதல் 20-ஆம் தேதி வரை பக்தர்கள் மலைக்கு செல்ல வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. மலையேறும் பக்தர்கள் பிளாஸ்டிக் கொண்டு செல்வதைத் தடுக்க, வனப்பணியாளர்கள் தன்னார்வலர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிகளை வனத்திற்குள் வீசுவதைத் தவிர்ப்பதற்காக வனத்துறை புதிய திட்டம் வகுத்துள்ளது. அதாவது கொண்டுவரும் தண்ணீர் பாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு, முன்பணமாக ரூ.20 பெறப்பட்டு, மலைக்கு சென்று திரும்பும்போது ஸ்டிக்கர் ஒட்டிய பாட்டில்களை கொடுத்துவிட்டு, அந்த பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

வளர்ச்சி பாதையில் இந்தியா: பிரதமர் மோடி பெருமிதம்.
கர்நாடகாவில மருத்துவமனையை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி, மருத்துவ கல்வியில் ஏராளமான...
Read More