குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் 1 மற்றும் 5ஆம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகளான பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி பிரசாரத்தை தொடங்கியுள்ளன.
இந்நிலையில், கட்லோடியா தொகுதியில் போட்டியிடவுள்ள முதல்வர் பூபேந்திர படேல், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் திறந்தவெளி வாகனத்தில் ஊர்வலமாக சென்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இந்த தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று பூபேந்திர சிங் முதல் அமைச்சராக தொடர்வார் என ஏற்கெனவே அமித் ஷா தெரிவித்திருந்தார். முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ், முதல் அமைச்சர் வேட்பாளர் குறித்து எவ்வித அறிவிப்பையும் இன்னும் வெளியிடவில்லை. அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் முதல் அமைச்சர் வேட்பாளராக இசுதான் கட்வி அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடற்கரையில் ஒதுங்கிய மீன்கள்; ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!
ஜப்பான் நாட்டின் ஹகொடட்டே கடற்கரையில் ஆயிரக்கணக்கான டன் கணக்கில் மத்தி மீன்கள் இறந்து...
Read More