Mnadu News

வேலூரில் அதிகளவு தோன்றிய பனி மூட்டம்; வாகன ஓட்டிகள் அவதி

வேலூர் மாவட்டம் வேலூர் மையப்பகுதிகளில் சென்னை டு பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, புதிய பேருந்து நிலையம், வேலூரில் இருந்து ஆந்திராவுக்கு செல்லக்கூடிய சாலைகள் அனைத்தும் இன்று அதிகாலை முதல் இயல்பை விட பனி மூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களின் முகப்பு விளக்கு எரிய வைத்தபடி சாலையை கடந்து சென்றனர். கடந்த காலங்களில் டிசம்பர் மாதத்தில் ஏற்படும் பனிமூட்டம் தற்போது நவம்பர் மாதத்திலேயே தொடங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

Share this post with your friends