புதுடெல்லியில் மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, வேளாண் கழிவுகளை எரிப்பதை கட்டுப்படுத்த கோடிக்கணக்கான ரூபாய் மற்றும் 2 லட்சம் இயந்திரங்களை வழங்கியும், வேளாண் கழிவுகளை எரிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. வேளாண் கழிவுகளை எரிப்பது அரசியல் பிரச்சினை அல்ல, அதைத் தடுக்க மாநிலங்கள் செயல்பட வேண்டும். கடந்த 2018-19-ஆம் ஆண்டு முதல் பஞ்சாப், டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் அரியானா ஆகிய 4 மாநிலங்களுக்கு வேளாண் கழிவுகளை எரிப்பதை கட்டுப்படுத்த மத்திய அரசு 3 ஆயிரத்து 138 கோடி ரூபாய் வழங்கி உள்ளது. அதில், பஞ்சாப் மாநிலத்துக்கு ஆயிரத்து 400 கோடியும், அரியானாவுக்கு 900 கோடி ரூபாயும், உத்தரபிரதேசத்துக்கு 713 கோடி ரூபாயும், டெல்லிக்கு 6கோடியே 70 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, உத்தரபிரதேசம் மற்றும் அரியானா மாநிலங்கள் நல்ல பணிகளைச் செய்து, சரியான திசையில் பயணிக்கின்றன. விவசாய ஆராய்ச்சி அமைப்பான ஐ.சி.ஏ.ஆர்-ஆல் உருவாக்கப்பட்ட டிகம்போசர், வேளாண் கழிவுகளை எரிப்பதைக் கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக உள்ளது. அதோடு, இதுபோன்ற இயந்திரங்களை மாநில அரசுகள் மற்றும் விவசாயிகள் பயன்படுத்த வேண்டும். என்று அவர் தெரிவித்து உள்ளார்.
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More