லைக்காவின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகி வரும் படம் “இந்தியன் 2”. உலக நாயகன் கமல்ஹாசன், குரு சோமசுந்தரம், சித்தார்த், பிரியா பவானி ஷங்கர், காஜல் அகர்வால் ஆகியோர் நடிப்பில் உருவாகி வருகிறது “இந்தியன் 2”. 2019 ஆம் ஆண்டு பூஜை போடப்பட்டு துவங்கப்பட்ட இப்படம் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து தற்போது படப்பிடிப்பை முடித்து உள்ளது.

முதல் முறையாக அனிருத், ஷங்கர் இயக்ககத்தில் இசை அமைக்கிறார். பா.விஜய், தாமரை, விவேக் ஆகியோர் பாடல்களை எழுதி உள்ளனர்.

இப்படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், அடுத்த வருடம் பொங்கல் அல்லது தமிழ் புத்தாண்டுக்கு திரைக்கு கொண்டு வர லைக்கா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

விக்ரம் படத்தின் மாஸ் புரொமோஷன் தான் படத்தை வெற்றி பெற செய்தது. இந்த நிலையில், அதை விட இரண்டு மடங்கு அதிகமாக உழைப்பு போட்டு படத்தை விளம்பரப்படுத்த கமல், ஷங்கர், லைக்கா திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்தியன் 2 படத்தின் பிரி புரொடக்ஷன் பணிகள் வேகமெடுத்து வருகிறது.

“இந்தியன் 2” படத்தின் காட்சிகளை பார்த்த கமலஹாசன், ஷங்கரை வெகுவாக பாராட்டியுள்ளார். அதோடு 8 லட்சம் மதிப்புள்ள வாட்சை ஒன்றையும் பரிசாக அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இந்தியன் 2” படத்தின் பிரதான காட்சிகளை இன்று பார்த்தேன். என் உளமார்ந்த வாழ்த்துகள் ஷங்கர். இதுவே உங்கள் உச்சமாக இருக்கக் கூடாது என்பதும் என் அவா. காரணம், இதுதான் உங்கள் கலை வாழ்வின் மிக உயரமான நிலை. இதையே உச்சமாகக் கொள்ளாமல் திமிறி எழுங்கள். பல புதிய உயரங்கள் தேடி என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு நன்றி தெரிவித்துள்ள இயக்குனர் ஷங்கர், நன்றியினாலும், மகிழ்ச்சியினாலும் என் இதயம் நிரம்பியுள்ளது. நான் சிறந்ததை வழங்குவதை ஒரு நாளும் நிறுத்தமாட்டேன். உங்கள் யதார்த்தமான நடிப்பு படத்திற்கு இன்றியமையாத சாரம்சத்தை கொண்டிருக்கிறது என்பதை நான் சொல்ல தேவையில்லை. இந்த சிறப்பான தருணத்தை நினைக்கூறும் உங்களுக்கு நன்றி. இந்த உணர்வை போற்றி மகிழ்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இது தற்போது வைரல் ஆகி வருகிறது.