ஸ்னாப் சாட் பழக்கம் :
நாகபட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியை அடுத்த திருப்பூண்டி பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் “ஸ்னாப் சாட்” என்ற செயலி மூலமாக சென்னை திருமுல்லைவாயல் பவானி தெருவை சார்ந்த கோபி என்பவரோடு பழகி வந்துள்ளார். ஆரம்பத்தில் நெய் ஒழுக பேசி வந்த அந்த இளைஞன் போக போக அவனது வேலையை காட்ட துவங்கி உள்ளான்.
பணம் கேட்டு மிரட்டல் :
ஆம், பணம் கேட்டு தொல்லை முடிவு செய்த அந்த இளைஞன் ஐந்தாயிரம் ரூபாய் பணத்தை கொடு, இல்லையென்றால் உனது புகைப்படங்களை மார்பிங் செய்து இணையத்தில் கசிய விடுவேன் என கூறி மிரட்ட துவங்கி உள்ளான். இதனால் பதறி போன சிறுமி விஷயத்தை பற்றி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.
புகார் & கைது :
சிறுமி கூறியதை கேட்டு அதிர்ந்து போன அவளது பெற்றோர் இது தொடர்பாக கீழையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் அவன் இருக்கும் இடத்தை அவனது செல்ஃபோன் எண்ணை வைத்து ட்ராக் செய்த போலீஸார் அவனை கைது செய்து அழைத்து வந்து தங்கள் பாணியில் விசாரித்து வருகின்றனர்.
எனவே, எதன் மூலம், எவர் பழகினாலும், மிகுந்த ஆர்வம் அடையாமல், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.