Mnadu News

ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் புகை மூண்டதால் அவசரமாக தரையிறக்கம்.

ஸ்பைஸ்ஜெட் கியூ400 விமானம் ஒன்று நேற்றிரவு கோவாவிலிருந்து புறப்பட்டு ஐதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்தது. நள்ளிரவு 1 மணியளவில் விமானம் தரையிறங்க தயாராகும் போது கேபினில் புகை காணப்பட்டது.திடீரென கேபினுக்குள் புகை வருவதைக் கண்டு அதிர்ர்சியடைந்த விமானி, உடனே விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளருக்குத் தகவல் கொடுத்தார். இதனையடுத்து அந்த விமானம் உடனடியாக தரையிறங்க ஏற்பாடு செய்யப்பட்டது. பின் ஐதராபாத் விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டது.அதில் இருந்த 86 பேர் அவசரகால வழி மூலம் வெளியே இறங்கினர். இதனையடுத்து ஐதராபாத் விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய ஒன்பது விமானங்கள் வேறி இடங்களுக்கு திருப்பி விடப்பட்டன.இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this post with your friends